செய்திகள்

அமேசான் நிறுவனத்தின் இந்த பிரிவுகளில் கூடவா பணி நீக்கம்? ஊழியர்கள் அதிர்ச்சி!

கல்கி டெஸ்க்

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் ஏற்கனவே 2 அறிவிப்பு மூலம் சுமார் 27000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது அதிகம் வருமானம் ஈட்ட முடியாத அதன் வீடியோ கேம் பிரிவுகளில் இருந்து சுமார் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

அமேசான் தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சியான கிரவுன் சேனல் உட்பட கேமிங் பிரிவில் செலவுக்கு இணையான வருமானத்தை ஈட்ட முடியாதது தான் தற்போதையை முக்கிய பிரச்சனையாக உள்ளது.

சமீபத்தில் அமேசான் நியூ வேர்ல்ட் என்ற பெயரில் புதிய கேம்-ஐ உருவாக்கி மக்களுக்கு அறிமுகம் செய்தது. 2021 செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த கேம் விளையாடுவோர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்து தமது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது, இந்த நிலையில் தற்போதைய பணிநீக்கம் நியூ வேர்ல்ட் கேம் பிரிவை பாதிக்காது என தெரிகிறது.

இந்த பணிநீக்கத்தின் வாயிலாக ப்ரைம் கேமிங், கேம் குரோத், மற்றும் நிறுவனத்தின் சான் டியாகோ ஸ்டுடியோவில் உள்ள ஊழியர்கள் தங்களது பணியை இழக்க உள்ளனர். இது மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட வர்த்தக திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக முடக்கப்படாவிட்டாலும், கிடப்பில் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் நிர்வாகம் கன்டென்ட்-ல் கவனத்தை ஆதரிக்க எங்கள் ஊழியர்கள் மற்றும் ஆதாரங்கள் சீரமைக்கப்படுகிறது என அமேசான் நிறுவனத்தின் கேம்ஸ் பிரிவின் துணைத் தலைவர் கிறிஸ்டோஃப் ஹார்ட்மேன் செவ்வாயன்று ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தி குறிப்பில் தெரிவித்தார். பணிநீக்கம் அமேசான் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் நடக்கிறது.

அமேசான் பணிநீக்கத்தின் முக்கிய பகுதியாக கேமிங் பிரிவு இதில் மாட்டிக்கொண்டு உள்ளது. மேலும் வரும் காலத்தில் புதிய முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம், மேலும் எங்கள் திட்டங்கள் முன்னேறும்போது இப்பிரிவு ஊழியர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து வளரும் என தெரிவித்துள்ளார் கிறிஸ்டோஃப் ஹார்ட்மேன்.

அடுத்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன்கள் விலை உயரும் என ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிவிப்பு!

விமர்சனம்: கங்குவா - படக்குழுவின் பேட்டிகளும் இப்போது படமுமே 'மீம் மெட்டீரியல்'கள் ஆகிப் போச்சே!

காவிரியில் கடைமுழுக்காடி ஜன்மாவை கடைத்தேற்றுவோம்!

நிதானமாக இருப்பதால் கிடைக்கும் லாபம் என்ன தெரியுமா?

NISAR - இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் பேரிடர் கண்காணிப்பு செயற்கைக்கோள்!

SCROLL FOR NEXT