செய்திகள்

"அமெரிக்காவின் மிகவும் ஆபத்தான மனிதர்" எனக் கருதப்பட்ட டேனியல் எல்ஸ்பெர்க் மரணம்!

கார்த்திகா வாசுதேவன்

வியட்நாம் போரைப் பற்றிய "பென்டகன் ஆவணங்களை" கசியவிட்டு மோதல் பற்றிய பொதுக் கருத்துக்களை மாற்றிய  டேனியல் எல்ஸ்பெர்க், நேற்று தனது 92 வயதில் இறந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

டேனியல் எல்ஸ்பெர்க் பற்றிய சுருக்கமான விவரங்கள் இங்கே:

திரு எல்ஸ்பெர்க் ஏப்ரல் 7, 1931 இல் சிகாகோவில் பிறந்தார். வளர்ந்ததெல்லாம் மிச்சிகன் புறநகர்ப்பகுதியில் என்கிறார்கள். அவர் ஹார்வர்ட் டாக்டர் பட்டம் பெற்று மரைன் கார்ப்ஸ் அதிகாரியாகப் பணியாற்றியவரும் கூட. பிபிசி அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் , பென்டகனை அடைவதற்கு முன்பு அவர் பாதுகாப்பு மற்றும் மாநிலத் துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார் என்று புலனாகிறது.

1971 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பென்டகன் முறைகேடுகளுக்கான ஆவணங்களை ஊடகங்களுக்கு வெளியிட்ட போது திரு எல்ஸ்பெர்க் ஒரு இராணுவ ஆய்வாளராக இருந்தார், AFP (Americans for Prosperity) இன் படி, எல்ஸ்பெர்க் வெளிப்படுத்திய பென்டகன் ஆவணங்களின் மூலமாக வியட்நாம் போரைப் பற்றி அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள் பொதுமக்களிடம் பொய் கூறியது தெள்ளத் தெளிவாக உறுதியானது.

மேற்கூறிய பென்டகன் ஆவணங்கள் கசிவு காரணமாகவே, எல்ஸ்பெர்க் "அமெரிக்காவில் மிகவும் ஆபத்தான மனிதர்" என்று அழைக்கப்பட்டாரென பிபிசி தெரிவித்துள்ளது.

1971 ஆம் ஆண்டில், திரு எல்ஸ்பெர்க் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் திருட்டு, உளவு, சதி மற்றும் சில குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டார். எவ்வாறாயினும், ஜூரி முடிவெடுக்கும் முன் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது, அதுமட்டுமல்லாமல் சட்டத்திற்குப் புறம்பாக தொலைபேசி ஒட்டுக்கேட்பு உட்பட கணிசமான அரசாங்க தவறுகளையும் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

வாழ்வில் பலவிதமான புதிர் தன்மைகளுடன் வாழ்ந்து வந்த எல்ஸ்பெர்க் இந்த ஆண்டு பிப்ரவரியில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்  கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஆறு மாதங்களே வாழ இருப்பதாகவும் அறிவித்திருந்தார். ஆறு மாதங்கள் இன்னும் முடிவடையாத நிலையில் 4 மாதங்களுக்குள் அவரது இறப்பு நிகழ்ந்திருக்கிறது.

அமெரிக்காவின் ஆபத்தான மனிதர் இப்போது  இந்த உலகில் இல்லை!

News 5 – (07.10.2024) விமான சாகசம்: ‘பாதுகாப்பில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை’ - தவெக தலைவர் விஜய்!

'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' - பாடலின் தத்துவ பொருள் என்ன?

சிங்கப்பூரில் 180 ஆண்டு கால குதிரைப் பந்தய வரலாறு முடிந்தது!

கருப்பை நீர்க்கட்டிகள்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்!

குகனின் தோற்றமும் பண்பும்!

SCROLL FOR NEXT