கருப்பை நீர்க்கட்டிகள்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்!

Ovarian Cyst
Ovarian Cyst
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ருப்பை நீர்க்கட்டி (Ovarian Cyst) என்பது கருப்பைக்குள் திரவம் நிறைந்த ஒரு பையாகும். நீர்க்கட்டிகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. எப்பொழுதாவது வீக்கம் அடி வயிற்று வலி அல்லது கீழ் முதுகு வலி போன்றவற்றை உண்டாக்கும். பெரும்பாலான நீர்க்கட்டிகள் பாதிப்பில்லாதவை. மாதாந்திர மாதவிடாய் சுழற்சியின் இயற்கையான பகுதியாக நீர்க்கட்டிகள் உருவாகி ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் மறைந்து விடும். சில நீர்க்கட்டிகள் அசாதாரண செல் வளர்ச்சியின் காரணமாக உருவாகும். இவற்றிற்கு இடுப்பு பரிசோதனை மற்றும் இடுப்பு அல்ட்ரா சவுண்ட் மூலம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

நீர்க்கட்டியின் அறிகுறிகள்: கருப்பை நீர்கட்டிகளால் பொதுவாக எந்த அசௌகர்யங்களும் ஏற்படாது. ஆனால். சில நீர்க்கட்டிகள் அசௌகரியமான அறிகுறிகளை உண்டாக்கும். இவை பொதுவாக நபருக்கு நபர் மாறுபடும். இடுப்பு வலி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல், மாதவிடாய் சுழற்சியில் ஒழுங்கற்ற தன்மை, அடி வயிற்றில் வலி மற்றும் அடி வயிறு கனமாக உணர்தல், வயிறு உப்புசம் போன்றவை.

கருப்பை நீர்க்கட்டியின் நீடித்த அறிகுறிகளில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இது ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் பருமன், மலட்டுத்தன்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். PCOS தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதற்கு ஆரம்பக் கால நோய் அறிதல் மிகவும் முக்கியம்.

நீர்க்கட்டிகள் வருவதற்கான காரணங்கள்: மாதவிடாய் காலங்களிலும், மாதவிடாய் நின்ற பெண்களையும் பெரும்பாலும் இந்த நீர்க்கட்டிகள் பாதிக்கின்றன. கருப்பைகள் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டையை வெளியிடும். அவை திரவத்தால் நிரப்பப்பட்ட நுண்ணறையில் பாதுகாக்கப்படுகின்றன. முட்டை வெளிவரத் தயாராகி வெளிவரும்போது திரவம் வெளியேறாமல் வீங்கி நீர்க்கட்டியை உருவாக்குகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?
Ovarian Cyst

ஹார்மோன் சமநிலையின்மை: ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் குறிப்பாக மாதவிடாய் சுழற்சியின்போது நீர்க்கட்டிகள் உருவாகத் தூண்டும்.

உடல் பருமன்:  அதிக எடை கொண்ட பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டி உருவாகும் அபாயம் உள்ளது.

கருப்பை நீர்க்கட்டிக்கான சிகிச்சை முறைகள்: இடுப்பு பரிசோதனைகள் மூலமும், அல்ட்ரா சவுண்ட் மூலமும் கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. கருப்பை நீர்க்கட்டிகள் உருவாவதைத் தடுக்க மாத்திரைகள், ஹார்மோன்கள் கொண்ட மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

பல வகையான கருப்பை நீர்க்கட்டிகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. நீர்க்கட்டிகள் வலியை ஏற்படுத்தினாலோ, பல மாதங்களுக்குப் பிறகும் அவை மறைந்து போகவில்லை என்றாலோ, பெரிதாகி அசாதாரணமாகத் தோன்றினாலோ சந்தேகத்திற்கிடமான அந்த நீர்க்கட்டிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படலாம்.

logo
Kalki Online
kalkionline.com