கண்காணிப்பு தீவிரம் 
செய்திகள்

பட்டாசு கொண்டு போறீங்களா? கண்காணிப்பு தீவிரம்!.

கல்கி டெஸ்க்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன.

ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பட்டாசுகள் போன்ற பொருட்களை கொண்டு செல்ல தடை உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் வியாபாரிகள் அல்லது பயணியர் சிலர் பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பர்.

இதை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ' தீபாவளி என்றால் கொண்டாட்டம், பட்டாசு எடுத்து சென்றால் திண்டாட்டம் என்ற தலைப்பில், துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர்.

பட்டாசுகள்

இது குறித்து சென்னை ரயில் கோட்ட மேலாளர் கணேஷ் கூறுகையில், " ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல கூடாது. பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்.

தீபாவளி நெருங்கும் நிலையில், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளன. மோப்ப நாய்கள் உதவியுடன் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்கிறார்.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT