செய்திகள்

அரசு அலுவலகங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லையா? மின்சாரம் கட் ....மின்வாரியம் உத்தரவு!

கல்கி டெஸ்க்

அரசு அலுவலகங்களில் முறையாக மின் கட்டணம் செலுத்தாத இணைப்பை துண்டிக்க மின்வாரியம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல அரசு துறை அலுவகங்கள் பயன் படுத்திய மின்சார கட்டணங்களை முறையாக செலுத்தாமல் மின்வாரியத்திற்கு பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தமிழ் நாடு மின்சார வாரியம் முறைப்படி கட்டணம் செலுத்தாத அரசு அலுவலகங்கள்

குறித்து ஆய்வு செய்து நோட்டீசும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இருந்தும் மின்சார கட்டணத்தை முறையாக செலுத்தவில்லை அந்த அலுவலகங்கள் . அதனால் அத்தகைய அரசு துறையை சார்ந்த அலுவலகங்களுக்கு மின்சார இணைப்பினை துண்டிக்க மின்வாரியம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின்சாரம்

மின்வாரியத்தின் ஆய்வுக் கூட்டம் கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. அப்போது, அத்தியாவசிய சேவை வழங்கும் அரசுத் துறைகள் தவிர மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள இதர அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரிய தலைவர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

அதேவேளையில், தெருவிளக்கு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகள் 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்துவதற்கு நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இயற்கையிடம் சுறுசுறுப்பை கற்றுக் கொள்ளுங்கள்!

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT