செய்திகள்

பெண்களுக்கேயான ஹஜ் பயணிகள் விமானம் கேரளா அசத்தல்!

கல்கி டெஸ்க்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் முதன் முதலாக முழுவதும் பெண்களுக்கேயான, பிரத்தியேகமான ஹஜ் பயணிகள் விமானம் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டது.

விமானத்தின் உள்ளே மட்டுமல்லாமல் விமானத்திற்கான தரை செயல்பாடுகள் மற்றும் விமான பராமரிப்பு பணிகளும் பெண் பணியாளர்களால் செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா குழுமத்தின் சர்வதேச பட்ஜெட் நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஏஐஎக்ஸ்எல்) நேற்று இந்தியாவின் முதல் முழு பெண் ஹஜ் விமானத்தை இயக்கியது. இதில் சுமார் 145 பெண் யாத்ரீகர்கள் பயணித்தனர். இந்த சிறப்பு விமானத்தின், அனைத்து முக்கியமான விமானப் பணிகளிலும் முழுக்க முழுக்க பெண் குழுவினர் ஈடுபட்டுனர்.இது இந்திய ஹஜ் கமிட்டியின் புதிய முயற்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆதரவாக இருந்தது.

முதல் முழு பெண் ஹஜ் விமானம் IX 3025, கோழிக் கோட்டில் இருந்து நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு ஜெட்டாவை வந்தடைந்ததாக விமான நிறுவனம் தெரிவித்தது. விமானத்தில், விமானி கனிகா மெஹ்ரா மற்றும் முதல் அதிகாரி கரிமா பாசி ஆகியோருடன் கேபின் குழு உறுப்பினர்களான பிஜிதா எம்பி, ஸ்ரீலட்சுமி, சுஷ்மா சர்மா மற்றும் சுபாங்கி பிஸ்வாஸ் ஆகியோர் இருந்தனர். பெண்களுக்கேயான பிரத்தியேகமான ஹஜ் பயணிகள் விமானம் ஏற்பாடு மற்றும் கேரளாவின் இந்த அசத்தல் குறித்த செய்திகள் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

உங்க உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்!  

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

சிறப்பான நாள் அமைவதற்கு காலையில் பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள்!

SCROLL FOR NEXT