கனமழை
கனமழை  
செய்திகள்

கன மழை எச்சரிக்கை வாபஸ்!

கல்கி டெஸ்க்

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் நோக்கி வந்த நிலையில், படிப்படியாக வலு குறைந்தது. அதனால் கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்படுகிறது. தற்போது மழை இல்லாத சென்னையில் குளிர் மட்டும் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையில் சில நாட்களாக ஊட்டி போல குளிர்வதாக பலரும் சொல்லிவருகின்றனர். எது எப்படியோ கனமழைக்கு வாய்ப்பில்லை என்பது தற்போது பலருக்கும் ஆறுதல்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் நோக்கி வந்த நிலையில், படிப்படியாக வலு குறைந்தது. நேற்றிரவு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. எனினும், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதன்படி, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்த நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்தது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT