இந்தியா ஒரு மறுக்க முடியாத உலக சக்தியாக திகழ்கிறது ஜி-20 தலைமை பொறுப்பு இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதாக அமையும் என தென்கொரியா பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஓராண்டு காலத்துக்கு இந்தியா ஏற்றுள்ளது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி 20 மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜி 20 சர்வதேச நிதி கட்டமைப்பு செயற்குழுவின் இரண்டு நாள் கூட்டம் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் 30ந்தேதி தொடங்கியது. இதில் உலக நிதி கட்டமைப்பு நிலைத் தன்மையையும் ஒன்றிணைப்பையும் மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும் 21 ஆம் நூற்றாண்டில் உலக சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சர்வதேச நிதி கட்டமைப்பு செயற்குழுவில் பிரான்ஸ், தென்கொரியா நாடுகள் இணைய தலைமை பொறுப்பை வகிக்கின்றன. மின் நிலையில் சண்டிகர் கூட்டத்தின் தொடக்க விழாவில் தென்கொரிய பிரதிநிதி பயுங்சிங் ஜங் பேசுகையில் “இந்தியா ஒரு மறுக்க முடியாத உலக சக்தியாக திகழ்கிறது. அது இந்தியாவின் பொருளாதார உயரத்தாலும் மக்கள் தொகையாலும் மட்டுமின்றி இந்நாட்டின் வரலாறு, முக்கிய நபர்கள் திரைப்படங்கள், சமையல் கலை ஆகியவற்றாலும் உருவாகி இருக்கிறது. தலைமை பொறுப்பு இந்தியாவின் திறனையும் வசீகரத்தையும் வெளிப்படுத்துவதாக அமையும். இந்த அமைப்பின் உறுப்பின நாடுகளின் கருத்துக்கள் ஆலோசனைகளுக்கு இந்தியா செவிமடுக்கும். அதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நலனுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்...” என்று கூறி இந்தியாவைப் பாராட்டியது அனைவரையும் கவர்ந்து பெருமிதப்படுத்தியது.
மேலும் ஜி20 நாடுகள் அமைப்பில் இந்தியா, ரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா, இந்தோனேசியா, சீனா, உள்ளிட்ட பல நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு சுழற்சி முறையில் தலைமை பொறுப்பு தரப்பட்டு ஜி 20 மாநாடு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவில், இந்த வருடம் செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்கள் என தேர்வு செய்து 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் ஜி-20 உறுப்பு நாடுகள் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு நடத்தப்பட்டு புதுச்சேரியில் இந்த மாநாடு ஜனவரி 30, 31 தேதிகளில் ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற லட்சியத்தில் ஒட்டுமொத்த நீண்ட கால வளர்ச்சியில் அறிவியலை பயன்படுத்துவது என்ற தலைப்பில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஜி 20 மாநாடுகளுக்கு தலைமை ஏற்று சிறப்பாக செயல் படும் இந்தியாவிற்கு கிடைத்த தென் கொரியாவின் பாராட்டு மேலும் சிறப்பாக நடைபெற பெரும் ஊக்க சக்தியாகிறது என்பதை மறுக்க முடியாது.