செய்திகள்

ஜொமேட்டோவில் இனி வெளிமாநில உணவும் கிடைக்கும்!

கல்கி

ஜொமோட்டோவில்  புதிதாக 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' என்கிற புதிய சேவை மூலம் வெளிமாநிலங்களில் இருந்தும் உணவு ஆர்டர் செய்து பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தன் டிவிட்டரில் குறிப்பிட்டதாவது:

ஜொமோட்டோவில்  புதிதாக 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' என்கிற புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் எந்த நகரத்திலிருந்தும் உணவுகளை ஆர்டர் செய்து பெற முடியும்.

அதாவது கொல்கத்தா ரசகுல்லா, ஐதராபாத் பிரியாணி ஆகியவற்றை சென்னையில் இருந்தே ஆர்டர் செய்து பெற முடியும். பெங்களூர் மைசூர் பாக், லக்னோ கபாப், டெல்லி பட்டர் சிக்கன் போன்ற தனித்தன்மை கொண்ட உணவுகளை ருசிக்க விரும்பும் உணவுப் பிரியர்களுக்கு ஜொமேட்டோவின் இந்த புதிய சேவை உதவும்.

ஆனால் பிற நகர உணவுகளை ஆர்ட்ர செய்யும் பட்சத்தில், அதிகபட்சமாக ஒரு நாளுக்குள் உணவு டெலிவரி செய்யப்படும். பெரும்பாலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை டெலிவரி செய்யப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதைக்கு, குர்கான் மற்றும் தெற்கு டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாகவும். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்த சேவை நாடு முழுவதும் விரிவு படுத்தப படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

முருகப்பெருமானின் அர்த்தமுள்ள திருநாமக் காரணங்கள்!

லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!

கேன்சரை தடுக்கும் 7 வகை வெஜிடேரியன் உணவுகள் தெரியுமா?

வெப்பம் வாட்டி வதைக்குதா? இந்த தேங்காய்ப்பால் ஐஸ்கிரீம் ட்ரை பண்ணி பாருங்களேன்! 

வேதங்கள் வழிபட்ட சிவபெருமான் எங்கு வீற்றிருக்கிறார் தெரியுமா?

SCROLL FOR NEXT