அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 72 நாட்களுக்குப் பின் இன்று அதிமுக தலைமை அலுவலகம் செல்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதேநேரத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கலுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது ஓபிஎஸ் தரப்புக்கும் இபிஎஸ் தரப்புக்கும் இடையே கலவரதம் ஏற்பட, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார், விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் இபிஎஸ் தலைமையில் நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து 72 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நாளை அதிமுக தலைமை அலுவலகம் செல்வதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது;
அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்திருந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
-இவ்வாறு குறிப்பிடப் பட்டுள்ளது.