செய்திகள்

நேபாளத்தில் தொடர் நிலநடுக்கம் .. பலர் பலி : டெல்லியிலும் நில அதிர்வு!

கல்கி டெஸ்க்

நேபாளத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் புது டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.

நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில் இதுவரைக்கும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

இது குறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு இருக்கும் செய்தி:

நேபாள நாட்டின் மேற்கே நேற்று இரவு 9.07 மணி அளவில் 6.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 9:56 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் பின்னர் இன்று அதிகாலை 2. 12 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.6 ரிக்டர் ஆக பதிவாகி இருக்கிறது.இந்த நிலநடுக்கங்களில் வீடு இடிந்து பலர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவின் புது டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT