தமிழ்நாட்டில் 2023 மற்றும் 2024க்கான கல்வி ஆண்டு இன்று முதல் திறக்கப்பட்டு ஆறு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ரத்து குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் காரணமாக 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு இன்று (ஜூன் 12ம் தேதி) தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் உற்சகமாக பள்ளிகளுக்கு சென்றனர். பல பள்ளிகளுக்கு மாணவர்கள் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா மேல்நிலை பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.