News 5 
செய்திகள்

News 5 – 18.09.2024 ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம்!

கல்கி டெஸ்க்

அமெரிக்காவுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

Prime Minister Modi, America

மெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ஜோ பைடன் உள்ளிட்டோருடன் வரும் 21ம் தேதி குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அங்கு இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 22ம் தேதி நியூயார்க் நகரில், இந்திய வம்சாவளியினர் இடையே உரையாற்றுகிறார், செப்டம்பர் 23 ம் தேதி ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்!

Chief Minister Stalin

மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமரைச் சந்தித்துப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, ஆசிரியர் தினத்தன்று அறிவிக்கப்பட்ட பி.எம்.ஸ்ரீ திட்டத்தில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ரயில் சேவைகளில் இன்று முதல் மாற்றம்!

Train

துரை, திண்டுக்கல், சமயநல்லூர் பகுதிகளில் வரும் அக்டோபர் எட்டாம் தேதி வரை ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அவ்வழியாகச் செல்லும் ரயில் சேவைகளில் இன்று முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் மதுரை, திண்டுக்கல், மணப்பாறை வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், திருச்சி வழியே இயக்கப்படும்.

  • குருவாயூர் - சென்னை விரைவு ரயில் செப்டம்பர் 23, 25, 26, 27,  அக்டோம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் விருதுநகர், காரைக்குடி வழியாக இயக்கப்படும்.

  • ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

  • செங்கோட்டையிலிருந்து ஈரோடுக்கு செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஜீப்ரா’ திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடு!

Zebra movie

ஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் ‘ஜீப்ரா’ திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி, அதாவது தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, படக்குழு அறிவித்துள்ளது.

சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணி!

Asia Champions Cup hockey series!

டவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 நாடுகளின் அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் முதல் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில், சீனாவுடன் மோதிய இந்திய அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக, இதே போட்டியில்,  2011, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது சீனாவை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை தன் வசமாக்கியுள்ளது.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT