News 5 
செய்திகள்

News 5 - (29.10.2024) த.வெ.க. கட்சி தலைவர் விஜய் எமோஷனல் டாக்!

கல்கி டெஸ்க்

இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்!

fighter jets

ந்திய விமானப் படைக்கு 114 நவீன போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் டெண்டர் முறையில் இந்த விமானங்களைக் கொள்முதல் செய்யத் திட்டம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 16 மாடல்களுக்குத் தடை!

Ban on Apple iPhone 16 models

ப்பிள் ஐபோன்16 மாடல்களைப் பயன்படுத்துவது சட்ட விரோதம் என்று கூறி வாங்கவும், விற்கவும் தடை விதித்தது இந்தோனேசியா அரசு. குறைந்தது 40 சதவிகித உதிரி பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதியை கடைபிடிக்காததால் இந்தத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

த.வெ.க. கட்சி தலைவர் விஜய் எமோஷனல் டாக்!

Tvk Vijay

டந்த 27ம் தேதி, விக்கிரவாண்டியில் த.வெ.க. கட்சியின் மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் "மாநாட்டிற்கு வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லாமல் கண்கள் கலங்க நிற்கின்றேன்; மாநாட்டிற்காக திரண்டு வந்த தொண்டர்கள் என் மீது வைத்துள்ள பாசத்திற்கு ஈடாக உலகத்தில் எதுவுமில்லை; ஆக்கப்பூர்வமான அரசியலை கையிலெடுப்போம்/ 2026ல் நம் இலக்கை அடைவோம்" என எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

இன்று வெளியாகிறது 'கங்குவா' படத்தின் ‘தலைவனே’ பாடல்!

Kanguva

சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள, 'கங்குவா' படத்தின் ‘தலைவனே’ பாடல் இன்று வெளியாக உள்ளதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹர்ஷித் ராணா!

Harshit Rana

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹர்ஷித் ராணா களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 31ம் தேதி IPL Retentionம், நவம்பர் 1ம் தேதி 3வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. தற்போது வரை ஹர்ஷித் ராணா Uncapped Playerஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடிகாரங்கள் காட்டும் 10 மணி 10 நிமிடம் - தத்துவம் என்ன?

இரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும் 5 பானங்கள்!

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

SCROLL FOR NEXT