செய்திகள்

ஒரு டிக்கெட் எடுத்தா போதும்.. சிட்டிக்குள் ரயில், பஸ் எதிலும் போகலாம்: முதல்வர் யோசனை!

கல்கி டெஸ்க்

சென்னையில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வசதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னையில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் (CUMTA) முதல் கூட்டம், இன்று காலையில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமம், மாநகர போக்குவரத்துக்கழகம், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தில் 4 துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் மூலம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய 5,904 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கி திட்டமிடல் செய்வதாகவும் கூறப்படுகிறது. 

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT