பீரேசில் நாட்டின் புகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரர் பீலே. இவர் உலகெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பீலேவுக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பீலேவுக்கு இதயம் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கரோனா தொற்றால் அவரது நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சொல்கின்றனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரிலிருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பீலே சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். அவரது உடல்நிலை தற்போது கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக, மகள் கெல்லி நஸிமென்டோ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தையின் கையை பிடித்திருக்கும் படத்தைப் பகிரந்து தந்தையே நீங்கள் தான் எனது வலிமை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவரும் பீலேவைக் காண உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் மருத்துவமனையை சுற்றிலும் குவிந்துள்ளனர். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீலே குணமடைய வேண்டும் என்று உலகம் முழுவதிலிருந்து பிரார்த்தனைகள் குவிந்து வருகிறது