செய்திகள்

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி! உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க முயற்சி!

கல்கி டெஸ்க்

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி அடுத்த மாதம் ஒலிபரப்பாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒலிபரப்பு செய்வதற்கான நோக்கம் என்னவெனில், பிரதமர் மோடி உலகளாவிய ஒரு சிறந்த தலைவராக இருக்கிறார். பிரதமரின் பணியை அனைத்து நாடுகளும் பாராட்டுகின்றன. அவர் என்ன பேசுகிறார் என கேட்க லட்சக்கணக்கான மக்கள் விரும்புகின்றனர்.

எங்களது இலக்கு, பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை எவ்வளவு நாடுகளுக்கு முடியுமோ அவ்வளவு நாடுகளுக்கு நாங்கள் ஒலிபரப்புவதற்கான நடவடிக்கையை முழு அளவில் செயல்படுத்துவோம் என பா.ஜ.க வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்நிகழ்ச்சியின்போது கடந்த காலங்களில், பிரதமர் மோடியுடன், பொதுமக்கள் உரையாட கூடிய நிகழ்வுகளும் நடைபெற்றது உண்டு. அதுபோன்ற நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மற்றும் கவர்னர்கள் கவுரவிப்பதற்கான திட்டமும் உள்ளது.டெல்லியிலும் இதுபோன்று, புகழ் வெளிச்சத்திற்கு வராத குறிப்பிடத்தக்க பல நாயகர்களை வரவேற்கும் திட்டங்களும் உள்ளன என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளதனை தொடர்ந்து அதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. கட்சியினர் முழு அளவில் தயாராகி வருகின்றனர். மன் கி பாத் நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு விச்சில் தயாராகி வருகிறது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பத்திரிகை!

தண்ணீர் பாட்டில் என்றாலே பிளாஸ்டிக் மட்டுமேதானா? மாற்றுவகைகள் உண்டா?

ஒன்பது வாசல் கடந்து மூலவரை தரிசிக்கும் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சூரியகாந்தி விதையின் வியக்க வைக்கும் மருத்துவப் பலன்கள்!

Type 1 Diabetes: இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 

SCROLL FOR NEXT