பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட் 
செய்திகள்

9 செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட்!

கல்கி டெஸ்க்

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து நாளை 9 செயற்கைகோளுடன்  பி.எஸ்.எல்.வி.சி-54 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து  நாளை ஏவப்படவுள்ள இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது.

முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணி என்பது குறிப்பிடத்தக்கது.

வானியல் மற்றும் விண்வெளி இயற்பியலின் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்வதற்காக இந்த செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட உள்ளன என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT