செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள்...!

கல்கி டெஸ்க்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனைப் படைத்துள்ளனர். சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்- ஏ, குரூப்- பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களை நிரப்புவதற்கும் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. 2022ம் ஆண்டுக்கான தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 39 பேர் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் முயற்சியிலேயே தேசிய அளவில் 107வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் ராமகிருஷ்ண சாமி என்ற தேர்வர் 117ஆவது இடத்தையும், மதிவதினி ராவணன் என்ற பெண் 447வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 933 பேர் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், முதல் நான்கு இடங்களை பெண்களே பிடித்து சாதனை படைத்துள்ளனர். இஷிதா கிஷோர் என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இதே போல் கரிமா லோகியா இரண்டாம் இடத்தையும், உமா ஹராதி என்ற பெண் மூன்றாமிடத்தையும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வைத் தென்காசியைச் சேர்ந்த சுப்புராஜ் என்றவர் தமிழில் எழுதி, அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

சுப்புராஜ் தற்போது டேக்ராடூனில் ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022 ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய யுபிஎஸ்சி தேர்வை இவர் தமிழில் எழுதியுள்ளார். இறுதி முடிவுகள் வெளியான நிலையில் அதில் அகில இந்திய அளவில் 621வது மதிப்பெண் பெற்று சுப்புராஜ் சாதனைப் படைத்துள்ளார்.

சிறுகதை - உண்மைகள் உறங்கட்டும்!

இந்த 10 விஷயங்களை ஒருபோதும் பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள்… மீறினால்? 

அதிசய எண் 108 பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க!

ஆன்மிகக் கதை - கங்கையின் மகிமை!

இந்த சம்மர் சீசனில் ஜில்லுனு ஜூஸ் குடிக்கலாமா?

SCROLL FOR NEXT