ஜம்மு காஷ்மீரில் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். காஷ்மீரில் உள்ள அனந்தநாக், குல்காம், பெக்ரம் போரா, சோபரே, அவந்தி போரா, ஜம்மு ஆகிய பகுதியிலும் டெல்லியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அவ்வபோது ஊடுருவி அச்சுறுத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள் நடமாட்டம் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோர், நிதி உதவி அளிப்போர் உள்ளிட்ட செயல்களை தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மாநிலந்தின் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ சோதனை நடத்தி வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 17 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அனந்த் நாக்கில் உள்ள ஹதிகம் கிராமத்தில் அரசு ஆசிரியர் இக்பால் ஷேக் மற்றும் டெய்லர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. புல்வாமாவில் உள்ள ராஜ்போரா கிராமத்தில் ஓய்வு பெற்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் அஹ்சன் மிரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எப். உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இந்த அதிரடி சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய என்ஐஏ அதிகாரிகள், ஜம்மு மற்றும் காஷ்மீரில் சைபர் ஸ்பேஸைப் பயன்படுத்தி, சிறுபான்மையினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களை குறிவைத்துள்ளனர். மேலும் மத ரீதியான கொள்கைகளை பரப்பியும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே இங்கெல்லாம்அதிரடியாக சோதனை நடத்தபி பட்டது என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். ..