செய்திகள்

திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்!

கல்கி டெஸ்க்

திருப்பூரில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 2 லட்சம் விசைத்தறியை நிறுத்தி 4-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 -இதுகுறித்து திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில்  விசைத்தறிக்கு சிறப்பு பிரிவின் கீழ் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த மின்சாரம், தற்போது சிறு, குறு என்ற பொது அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்கு 30% மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும் ஆண்டுக்கு 6% மின் கட்டண உயர்வு  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி உரிமையாளர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் சுமை.

அதனால் இந்த விசைத்தறி தொழிலை விடுத்து வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

-இவ்வாரு தெரிவித்தனர்.

இதனை எதிர்த்து, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து  4- வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

சிறுகதை - ஒரே ஒரு பூ!

SCROLL FOR NEXT