NMMS 
செய்திகள்

உதவித்தொகை வேண்டுமா ? இதனை படித்து பயன் பெறுங்க...!

National Merit and Skill Training Scheme (NMMS)

கல்கி டெஸ்க்

தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் , 2023 பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு National Merit and Skill Training Scheme (NMMS) விண்ணப்பிக்கலாம் .

2022-2023-ம் கல்வியாண்டிற்கான 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு தற்போது மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவைப்பு வெளியாகியுள்ளது.

மாணவ மாணவிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து, தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.01.2023 ஆகும்.

Government of tamil nadu

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் படிப்பு உதவித் தொகை, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை ( scholarship ) வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 25.02.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் https://dge1.tn.gov.in என்ற இணைய தளம் வழியாகப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

SCROLL FOR NEXT