சொமேட்டோவில் டெலிவரி செய்து கொண்டே படித்த நபர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு என்பது தமிழக அரசாங்கத்தின் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். பல்வேறு பிரிவுகளாக இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இன்றைய இளைஞர்கள் தனது கனவை அடைவதற்காக அல்லும், பகலுமாக உழைத்து வருகின்றனர். சரியான வேலை கிடைக்காமல் பலரும் சொமேட்டோ, ஸ்விகியில் டெலிவரி பாயாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சொமேட்டோ டெலிவரி பாயாக இருக்கும் நபர் ஒருவர் தன் லட்சியத்தை அடைந்திருக்கும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் வெற்றியை கொண்டாடும் விதமாக சொமேட்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் இவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடியுள்ளது. தனது பதிவில், ''சொமேட்டோவில் டெலிவரி கூட்டாளியாக வேலை செய்து கொண்டே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அனைவரும் ஒரு லைக் போடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளது. படத்தில் விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த ட்விட்டர் பக்கத்தில் ரிப்ளை செய்த விக்னேஷ் தன் வேலை என்னவென்று பதிவுசெய்துள்ளார். தேசிய அளவில் நடைபெற்ற போட்டி தேர்வில் வெற்றி பெற்ற இவர் நியூ இந்தியா Assurance நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.