இப்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்கள், e-Sim பயன்படுத்தும் வசதியுடன்தான் வெளி வருகின்றன. அதாவது இத்தகைய ஸ்மார்ட் ஃபோன்களில் நீங்கள் பிஸிக்களாக சிம் எதுவும் போட வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு வேண்டிய சிம் நெட்வொர்க்களை உங்கள் ஸ்மார்ட் போனிலேயே ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். இது மிகவும் பாதுகாப்பான முறை எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், இதன் வழியாகவும் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைத் திருடுவதற்கு ஹேக்கர்கள் புதியய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
இப்படி நடக்கும் நூதானே மோசடி குறித்து ரஷ்ய இணையப் பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை சிம்கார்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு விதமான மோசடிகள் நடந்திருந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடிக்காரர்களும் மாற்றம் பெறுகின்றனர். இ-சிம் கார்டு என்பது நாம் சராசரியாகப் பயன்படுத்தும் சிம் கார்டுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட டிஜிட்டல் வகை சிம் ஆகும். இதுபோன்ற சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்களின் ப்ரொபைல்களைக் குறிவைத்து, ஹேக்கர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முற்றிலும் நூதனமான முறையில் க்யூ ஆர் கோடைப் பயன்படுத்தி, போலி e-Sim உருவாக்கும் ஹேக்கர்கள், அதன் மூலமாக வாடிக்கையாளர்களின் முக்கிய தகவல்களைக் கொண்டு டெலிகாம் நிறுவனத்தில் பதிவு செய்கின்றனர். இதன் மூலமாக வேறு ஒருவரது பெயரில் போலியாக e-Sim ஆக்டிவேட் செய்யப்படுகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அவர்களது வங்கி கணக்குகளை அணுகி, அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். மேலும் உங்களது இதன் மூலமாக தனிப்பட்ட தகவல்களை வெளியிடும் வாய்ப்புள்ளதால், eSim பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஃபோன்களில் e-Sim மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்ப்படப் போகிறது என்பதால், ஹேக்கர்களால் ஏற்படப்போகும் அபாயம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவருமே தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய, Two factor authentication அம்சத்தை எனேபிள் செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலமாக உங்கள் சாதனத்தை எளிதில் ஹேக் செய்யப்படுவது தவிர்க்கப்படும். மேலும் உங்களது தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுவதையும் நீங்கள் தடுக்கலாம்.