ஆஃப்லைன் வழியாகவும் கூகுள் மேப்பை பயன்படுத்த க்கூடிய அப்டேட்டை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.
முன்பு அட்ரஸ் கேட்க வேண்டும் என்றால் ஒரு நபரையோ அல்லது ஆட்டோக்காரரையோ கேட்டு, செல்லும் இடத்தின் பாதையை அறிந்து கொள்வோம். ஆனால் தற்பொழுது கூகுள் மேப் அந்த பணியை மேலும் சுலபமாகிவிட்டது. சுலபமாக அணுகக் கூடியதாக இருப்பதால் பெருவாரியான ஓட்டுநர்களின் தோழனாக கூகுள் மேப் மாறிவிட்டது. இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூகுள் மேப்பின் பயன்பாட்டை மேலும் விரிவு படுத்த கூகுள் நிறுவனம் தொடர்ச்சியான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் கூகுள் மேப்பில் லொகேஷன் ஹிஸ்டரி, டைரக்சன், சர்ச் ஸ்பெஷாலிட்டி மற்றும் விசிட் ஆகியவற்றை தேடி விட்டு பிறகு டெலிட் செய்ய முடியும். மேலும் கூகுள் மேப் பயனாளர்களை அடையாளப்படுத்த உதவும் ப்ளூ டாட் வசதியில் கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன.
இது மட்டும் அல்லாது லோக்கேஷன் ஹிஸ்டரி, டைம் லைன் ஆகியவற்றை கிளவுடில் சேமிப்பதற்கு பதிலாக ஆஃப்லைனில் பதிவு செய்து ஸ்டார்ட் செய்து கொள்ள கூடிய வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கூகுள் மேப் பயனாளர்கள் ஆஃப்லைன் மூலமாகவும் இனி கூகுள் மேப்பை பயன்படுத்த முடியும்.
இதனால் டேட்டா சேவ் ஏற்படும். மேலும் இக்கட்டான, தொலைத்தொடர்பு வசதி இல்லாத இடங்களிலும் கூகுள் மேப்பை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.