Amazon Passkey
Amazon Passkey  
அறிவியல் / தொழில்நுட்பம்

அமேசானில் வந்துவிட்டது Passkey அம்சம்!

கிரி கணபதி

இணையத்தில் நம்முடைய கணக்குகளுக்கும் செயல்பாட்டுகளுக்கும் கடவுச்சொல் கட்டாயமானதாகும். வங்கிக் கணக்கு முதல் சமூக ஊடகக் கணக்கு வரை எதுவாக இருந்தாலும் அதற்கு பாஸ்வேர்ட் முக்கியம். நாம் நம்முடைய கணக்கிற்கு எவ்வளவு வலிமையாக பாஸ்வேர்ட் வைக்கிறோமோ அவ்வளவு பாதுகாப்பாக நம்முடைய கணக்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

ஆனால் என்னதான் வலிமையான பாஸ்வேர்டாக இருந்தாலும் அதையும் உடைத்து சைபர் தாக்குதல்கள் நடந்துதான் வருகிறது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து பயனர்களை பாதுகாக்க வந்ததுதான் Passkeys என்ற அம்சம். அதாவது நாம் நம்முடைய தனிப்பட்ட கணக்குகளை பாஸ்வேர்ட் இல்லாமல் பயோமெட்ரிக் சென்சார் மூலமாக உள்ளே நுழையலாம். ஏற்கனவே கூகுள், ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள் இந்த புதிய அம்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது இதில் அமேசான் நிறுவனமும் இணைந்துள்ளது. இது பாஸ்வேர்ட் போட்டு உள்ளேன் நுழையும் காலத்தின் முடிவு என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர். 

இந்த அம்சம் மூலமாக பயனர்கள் அமேசான் தளத்திற்குள் நுழைவது எளிதாக இருக்கும். கடவுச்சொல்லை விட வசதியான மாற்றாக இது கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த அம்சத்தால் சைபர் குற்றவாளிகள் அவ்வளவு எளிதில் நம்முடைய கணக்கினுள் நுழைய முடியாது. ஏனெனில் இது பெரும்பாலும் நம்முடைய கைரேகை, முகத்தின் ஸ்கேன் அல்லது நமது சாதனத்தில் நாம் பயன்படுத்தும் ஸ்கிரீன் லாக் பேட்டர்ன் போன்றவற்றை பயன்படுத்தியே உள்ளே நுழைய முடியும் என்பதால், சைபர் கொள்ளையர்கள் அதைக் கண்டறிவது சாதாரணமல்ல. 

இதற்கு முன்னர் அமேசான் உள்ளே நுழைவதற்கு கடவுச்சொல் மற்றும் மெசேஜ் மூலமாக OTP அனுப்புவதில் ஏற்படும் சைபர் தாக்குதல்களை விட இதில் பயனர்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கலாம். இந்த அம்சம் ஏற்கனவே இணையதள பயனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது iOS சாதனங்களில் இந்த அம்சம் வர உள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து விரைவில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் இந்த அம்சத்தை அவர்கள் கொண்டு வர உள்ளனர். இதனால் பயனர்களின் கணக்கு மேலும் பாதுகாப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT