ஸ்பெஷல்

23 ரயில்கள் ரத்து: மேம்பாலத்தில் விரிசல் காரணமாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கல்கி

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்ததாவது:

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக,இன்று 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜோலார்பேட்டை, சென்னை,வேலூர்,பெங்களூரு,மைசூரு,மங்களூரு,கோவை,ரேணிகுண்டா,அரக்கோணம் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,பொன்னையாற்றில் ஆங்கிலேயர்கால ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மங்களூரு-சென்னை, ஆலப்புழா-சென்னை,ரேணிகுண்டா-மைசூரு உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

-இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.எனினும்,ஏற்கனவே புறப்பட்டு சென்ற ரயில்கள் மற்றொரு வழித்தடத்தில் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT