ஸ்பெஷல்

7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மெக்சிகோவில் பலர் பலி!

கல்கி

மெக்சிகோவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் மெக்சிகோவில் உள்ள டியூலா என்ற நகரத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியதையடுத்து அங்குள்ள ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அபாய அளவை தாண்டி வெள்ளம் நகருக்குள் புகுந்ததால், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. டியூலா நகரத்தில் உள்ள மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் மின்சாரம் மற்றும் ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டது. இதனால் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் உட்பட 16 நோயாளிகள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் குழுவினர், 40க்கும் மேற்பட்ட நோயாளிகளை மீட்டு பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.மழை சற்று குறைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மெக்சிகோ அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதனிடையே மெக்சிகோவில் உள்ள குரெரோவின் அகாபுல்கோவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT