ஸ்பெஷல்

இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு : புதிதாய் 50 ஆயிரம் பேர் பாதிப்பு!

கல்கி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50,867 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இங்கிலாந்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,60,981 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக ஒரேநாளில் 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 93 லட்சத்து 78 ஆயிரத்து 165 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 11,36,681 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
_ இவ்வாறு அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 25ம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று 38க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Vatican City

வாடிகன் நகரம்: ஊர் சிறுசு; சுவாரசியம் பெரிசு!

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT