ஸ்பெஷல்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

கல்கி

இந்தியாவில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் ஒமைக்ரான் வைரஸால் பாட்திக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மருத்துவர் உள்பட 2 பேருக்கு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது

இந்நிலையில், இந்தியாவில் மைக்ரோன் பாதிப்பு 200- தொட்டுவிட்டது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தலைநகர் டெல்லியில் 54 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேபோல் கர்நாடக மாநிலத்தில் 19 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 200 பேருக்கு மைக்ரான் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எழுபத்தி ஏழு பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT