ஸ்பெஷல்

இன்றுமுதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி!

கல்கி

இன்று முதல் மெரினா கடற்கரை, வண்டலூர் மிருக காட்சி சாலை உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இப்பகுதிகளில் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரத் தொடங்கினர்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. வழிபாட்டு தலங்கள், மற்றும் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா குறையத் தொடங்கிய நிலையில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி பிப்ரவரி 1-ம் தேதிமுதல் சென்னை மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளாரங்கம், அண்ணா நூலகம் போன்ற இடங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், இப்பகுதிகளில் மக்கள் உற்சாகமாக வரத் தொடங்கியுள்ள்னர் என்பது குறிப்பிடத் தக்கது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT