ஸ்பெஷல்

சசிகலாவின் ரூ.15 கோடி சொத்து முடக்கம்! 

கல்கி

சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

கடந்த 2017-ம் ஆண்டு, வருமான வரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 180 இடங்களில் சோதனை மேற்கொண்டபோது, சசிகலா தரப்பில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த 5 வருடமாக அவரது பினாமி சொத்துக்கள் முடக்கப் பட்டு வருகிறது.

இதுவரை ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில், இப்போது சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சசிகலா தரப்பு வாங்கிய ரூ.15 கோடி சொத்துக்கள் பினாமி சொத்து என உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த பினாமி சொத்துக்களை முடக்கும் பணி வருமான வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT