ஸ்பெஷல்

அந்தமானில் 20 முறை நிலநடுக்கம்: சுனாமி அச்சம்!

கல்கி

இந்திய  யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை வரை அடுத்தடுத்து 20 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், மக்கள் பீதியுடன் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து தேசிய நில அதிர்வியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளில் 

நேற்று காலை 11.05 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.4 அளவுக்கு முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. பின்னர் தொடர்ந்து இன்று அதிகாலை வரை 20 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2.54 மணியளவில் போர்ட்பிளேயருக்கு தென்கிழக்கே 244 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 4.4 ஆக பதிவாகியது. அதையடுத்து காலை 5.57 மணிக்கு  5.0 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

-இவ்வாறு தேசிய நில அதிர்வியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்டு வரும் தொடர் நில நடுக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் மீனவர்களுக்கும், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். 

(ஒரே பெயர் கொண்ட) இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களின் இரட்டை சதங்கள்!

“இந்தியா எங்களின் பரம எதிரி” – பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் பேச்சால் சர்ச்சை!

அவமானமும் ஒரு மூலதனம்தான்!

ஆதரவற்ற சிறுவர்களை முன்னேற்றும் முயற்சி! ரோகன் போபண்ணாவின் உயரிய நோக்கம்!

சூரிய ஒளி எனும் மருந்தின் மகத்துவம் தெரியுமா?

SCROLL FOR NEXT