ஸ்பெஷல்

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் ராஜினாமா!

கல்கி

பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அங்கு ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து ரிஷி சுனக் கூறியதாவது;

பிரிட்டன் அரசு திறமையுடன் சரியாக செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு பணியாற்ற வழியில்லாததால்   நான் நிதியமைச்சர்  பதவியை ராஜினாமா செய்கிறேன். நான் பதவி விலகுவதே இங்கு கடைசியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்

இவ்வாறு இந்தியரான ரிஷி சுனக் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது நம்பிக்கை இழந்து விட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரின் ராஜினாமா காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தந்தத்துக்கு நிகரான கொம்புகளைக் கொண்ட காண்டாமிருகங்கள்!

ஒரு நபரை முதல்முறை சந்திக்கப் போகும்போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

ஆண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 

ஒரே நாளில் மூன்று கோலத்தில் காட்சி தரும் அதிசய முருகன் கோயில்!

சிறுகதை - முகம் மாறு தோற்றப் பிழை!

SCROLL FOR NEXT