ஸ்பெஷல்

பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்: சுகாதாரத்துறை செயலர்!

கல்கி

தமிழகத்தில் பொதுஇடங்களில் மக்கள் முககவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ. ராகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார்.

இன்று சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர மற்றும் சேலம், கோவை போன்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை அங்கு சுமார் 700 பேருக்கு சோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் மாணவர்கள் 29 பேர், பணியாளர் ஒருவர். . இதையடுத்து அப்பகுதி கொரோனா கிளஸ்டர் பகுதியாக மாற்றப்பட்டு, கிருமிநாசினி தெளிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தனி மனித இடைவெளி கடைபிடிப்பது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பதன் எதிரொலியாக, தமிழகத்திலும் சென்னை, திருவள்ளூர், சேலம், கோவை போன்ற ஊர்களில் கொரோனா அதிகரித்துள்ளது. அதனால் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதுரையின் விளக்குத்தூண் பற்றி தெரியுமா?

பார்த்திபன் இயக்கும் டீன்ஸ் படத்தின் புதிய அறிவிப்பு!

Safety Tips for Children: குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லித் தர வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்! 

உணவில் சேர்க்க வேண்டிய 9 சிறந்த அல்கலைன் உணவுகள்!

நியூ தக்... கமலின் தக் லைஃப் படத்தில் STR... மாஸ் புரோமோ வைரல்!

SCROLL FOR NEXT