ஸ்பெஷல்

இத்தாலி எட்னா எரிமலை; ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு!

கல்கி

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை வெடித்துச் சிதறி, நெருப்புக் குழம்பு ஆறு போல பாய்ந்தோடுகிறது. இந்த அபூர்வமான காட்சியை இரவு நேரத்தில் கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

-இதுகுறித்து இத்தாலி நிலவியல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

ஐரோப்பாவின் 3 பெரிய எரிமலைகளில் எட்னாவும் ஒன்று. இது இத்தாலியில் சிசிலி பகுதியில் அமைந்துள்ளது. இந்த எரிமலை பலமுறை வெடித்துச் சிதறியுள்ளது. ஆனால் இந்தமுறை இந்த எரிமலையின் சீற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. எரிமலை வெடித்துச் சிதறி லாவா என்கிற நெருப்பு குழம்பு ஆறு போல் உருகி ஓடுகிறது. ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் ஜொலிக்கும் லாவா நெருப்பு குழம்பின் கண்கொள்ளாக் காட்சியைக் காண பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இந்த எட்னா எரிமலை இன்னும் சில நாட்களுக்கு எரிமலை குழம்பை வெளியிடும் என்பதால்,  எரிமலை சீற்றத்தை 24 மணி நேரமும் நிபுணர்கள் கண்காணித்து வருகின்ற்னர்.

-இவ்வாறு இத்தாலி நிலவியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT