நாட்டின் பல மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து அம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
நாட்டில் பல மாநிலங்களில் கோடையை முன்னிட்டு வெப்பம் அதிகரிக்துள்ளது. இந்நிலையில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் பல மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும். இதன் காரணமாக வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் ராஜ்கர்க் பகுதியில் 45.6 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவான நிலையில், வடமேற்கு இந்தியாவில் பல இடங்களில் 47 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.