நாடு முழுவதும் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படி இணைக்கத் தவறினால் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்ததாவது:
நாட்டில் அனைவரும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி தேதி நாளாகும். அப்படி தவறும் பட்சத்தில் அடுத்த 3 மாதங்கள் வரை ரூ.500 அபராதத்துடனும் அதற்கு பிறகு ரூ.1000 த்துடன் கூடிய அபராதத்துடன் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான வழிமுறைகள்;
* வருமான வரித் துறையின் www.incometax.gov.in/ https://www.incometax.gov.in/iec/foportal என்ற முகவரிக்கு செல்லவேண்டும்.
* அந்த இணையதளத்தின் இடது பக்கத்தில், Quick Links என்ற ஆப்ஷனுக்குச் சென்று 'லிங்க் ஆதார்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் அதில் உங்கள் பான் நம்பர் மற்றும் ஆதார் எண் மற்றும் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
*உங்கள் பான் மற்றும் ஆதார் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், already linked என காட்டப்படும். அப்படி ஏற்கனவே இணைக்கப் படாத பட்சத்தில், உங்கள் செல்போனில் OTP நம்பர் கிடைக்கப் பெறும்.
*அந்த ஓடிபி நம்பரை பதிவிட்டதும் உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்பட்டு விடும்.