ஸ்பெஷல்

மகாகவி பாரதியாரின் 138-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி டிவீட்!

கல்கி

மகாகவி பாரதியாரின் 138 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பாரதியார் குறித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

அவரது அந்த ட்வீட்டில், "மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன. சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார்.

மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது"

– இவ்வாறு பிரதமர் மோடி தன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி எழுதும் " எப்படிப் பிறந்தாள் புதுமைப் பெண்?" என்ற தொடர், இன்று வெளியான மங்கையர் மலர் இதழில் தொடங்குகிறது.

https://kalkionline.com/mangayarmalar-11-12-21-eppadi-piranthaal-pudhumaipenn/

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT