ஸ்பெஷல்

முப்படைகளின் தலைமை தளபதி: தற்காலிகமாக ராணுவ தளபதி நரவனே நியமனம்!

கல்கி

இந்திய முப்படைகளின் தற்காலிக தலைமை தளபதியாக களின் குழு ராணுவ தளபதி நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதலாவது தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த பதவிக்கான புதிய நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில்

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை தற்காலிகமாக ராணுவ தளபதி நரவனே கூடுதல் பொறுப்பாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்:

இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் விபத்தில் உயிரிழந்த நிலையில், முப்படைக் குழுவின் பணிகளில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக ராணுவ தளபதி நரவனேவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகளில் சீனியர் என்ற அடிப்படையில் நரவனே இப்பொறுப்பை தற்காலிகமாக கவனித்து கொள்வார்.

இவ்வாறு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT