ஸ்பெஷல்

சபரிமலை பம்பை நதியில் பக்தர்கள் நீராட தடை: கேரள அரசு அறிவிப்பு!

கல்கி

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டலபூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள், பம்பை நதியில் நீராட தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு சீசன் துவங்கவுள்ளது.

இந்த பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதற்கு தலைமை வகித்த தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகளின்போது தினந்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கான 'ஆன்லைன்' முன்பதிவு நடக்கிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த ஆண்டும் பெரிய பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள், பம்பையில் குளிக்கவோ, கோவில் சன்னிதானத்தில் தங்கவோ அனுமதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT