ஸ்பெஷல்

கோவாக்சினுக்கு அங்கீகாரம்: அக்டோபர் 6-ல் ஆலோசனை!

கல்கி

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு அக்டோபர் 6-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறது

கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத் நிறுவனம் கோவாக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் 3 கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பியுள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

கொரோனா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் கோவாக்சின் தடுப்பூசி மீது விவாதம் நடத்தப்படும். இறுதியாக நிபுணர் குழு தனது சிபாரிசுகளை அளிக்கும். அதன் அடிப்படையில் கோவாக்சினை அங்கீகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது.

(கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம், அக்டோபர் 6-ம் தேதி ஆலோசனை, உலக சுகாதார அமைப்பு).

நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் டோஃபுவின் ஆரோக்கிய நன்மைகள்!

வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?

அக்னி நட்சத்திரமும் மகாபாரத கதையும் தெரியுமா?

அக்னி நட்சத்திரம் காலத்தை சமாளிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா?

சமையலறையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்ற 3 எளிய வழிகள்!

SCROLL FOR NEXT