ஐசிசி ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 5 ஆம் தேதி நடந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி அஹமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்தப்போட்டியில் 96 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் ஆனார் ரச்சின் ரவீந்திரா. அதேபோல் 121 பந்துகளில் 152 ரன்கள் எடுத்து ரசிகர்களின் நாயகனான டேவன் கான்வேவின் சொல்லபடாத வரலாறுதான் இது.
டேவன் பிலிப் கான்வே 1991 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் டி காக்,தெம்பா பவுமா போன்ற பிரபல வீரர்கள் படித்த ஜான்ஸ் கல்லூரியில்தான் இவரும் படித்தார். தென்னாப்பிராக்காவிலையே கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே கல்லூரி ஜான்ஸ் கல்லூரித்தான். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதீத காதல் கொண்டிருந்த டேவன் பிலிப் கான்வே பல உள்நாட்டு விளையாட்டுகளில் ஆட ஆரம்பித்தார்.
தன் முழு வாழ்க்கையும் கிரிக்கெட்டிற்கு அற்பனித்த நிலையில் வருடங்கள்தான் சென்றதே தவிர எந்த முன்னேற்றமும் இல்லாமல் வெறும் உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே ஆடிக்கொண்டிருந்தார் கான்வே. அவருடன் விளையாடிய அனைவருமே தென்னாப்பிரிக்கா தேசிய அணியில் விளையாட ஆர்ம்பித்தனர். ஆனால் இவருக்கு மட்டும் காலம் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருந்தது. 23 வயதாகிறது இனியும் தாமதிக்க வேண்டாம் என்று ஏன் தன்னை தேசிய அணியில் இணைக்க மறுக்கிறீர்கள் என பயிற்சியாளரிடம் டேவன் கான்வே கேட்டதற்கு ” உனக்கு எந்த தகுதியும் இல்லை, எதாவது ஒரு போட்டியாவது நன்றாக ஆடி உள்ளாயா? பேசாமல் கிரிக்கெட்டை மறந்து விடு” என்று கூறி யார் மீதோ உள்ள கோபத்தையெல்லாம் கான்வே மேல் காண்பித்துவிட்டார்.
ஆனால் கான்வேவிற்கு ஒன்று புரிந்தது மறக்க வேண்டியது கிரிக்கெட்டையல்ல என்று. முதல் படியில் வெற்றி பெற்றார். ஆம்! சாதனைப் படிகளின் முதல் படி அவமானம் மற்றும் நிராகரிப்பு தானே? வீட்டிற்கு வந்து நடந்ததையெல்லாம் கூறிய கான்வேவிற்கு அவர் பெற்றோர் மேலும் சில அதிர்ச்சிகளைத் தந்தனர். கான்வேவின் கனவிற்காக தனது சொத்துகளையெல்லாம் விற்று குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றனர்.
இதுவரை செய்த பயிற்சியை தவிர வேற ஏதுவுமே கையில் இல்லாமல் தனது பயணத்தை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தார் கான்வே. வேறு நாட்டில் தோற்றுப்போனால் விளைவைப் பற்றி அறிந்தும் சிறிதும் தளர்வில்லாமல் களத்தில் இறங்கினார்.
நீண்ட பயணத்திற்கு பிறகு கான்வே 2020 ம் ஆண்டு முதன்முறையாக டி20 போட்டியில் நியூசிலாந்து தேசிய அணியில் அறிமுகமானார். 2021 இல் தனது முதல் டெஸ்ட் அறிமுக ஆட்டத்தை இங்கிலாந்தை எதிர்த்து ஆடத் தொடங்கினார். 2021 ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்து தனது அறிமுக ஆட்டத்தைத் தொடங்கினார். நியூசிலாந்து தேசிய அணி சார்பில் டி 20 போட்டியில் தனது முதல் அறிமுக போட்டியை 2020 ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகத் தொடங்கினார்.
இதுவரை 23 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொண்டு 1,026 ரன்களும், 16 டெஸ்ட் போட்டிகளில் 1,403 ரன்களும் 41 டி20 போட்டிகளில் 1,248 ரன்களும் எடுத்துள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் IPL தொடரில் 2022 ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 23 போட்டிகளில் 924 ரன்கள் எடுத்துள்ளார் டேவன் பிலிப் கான்வே. இதனால் சிஎஸ்கேவின் காவல் தெய்வம் என ரசிகர்களால் போற்றப்படுவதும் உண்டு.
தனது கிரிக்கெட் பயணத்திற்காக எத்தனை எத்தனை பாதைகளை மாற்றி இன்று தனக்கு வாய்ப்பு கொடுத்த தேசிய அணிக்காக சதங்கள், அரை சதங்கள் என பாரப்பட்சம் பார்க்காமல் வெறிக்கொண்டு ஆடிவரும் டேவன் கான்வே கடந்த வந்த பாதை ஒவ்வொரு விளையாட்டு வீரரருக்கும் அனுபவ பாடமாகும்!