இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையேயான டி20 விளையாட்டு முடிந்த நிலையில், இன்று இலங்கையுடன், ரோகித் சர்மா தலைமையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் முதல் பாதியில் இந்திய அணி அபராமாக விளையாடி 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை துவக்கிய நிலையில், துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் இறங்கினர்.
துவக்கம் முதலே அடித்து ஆடிய இருவரும் இலங்கை பந்து வீச்சாளர்களின் பந்தை பவுண்டரிகளுக்கு விரட்டி வந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க இலங்கை பந்து வீச்சாளர்கள் திணறி வந்த நிலையில், இந்திய அணியின் ஸ்கோர் 143 இருந்தபோது முதல் விக்கெட்டாக 70 ரன்கள் எடுத்த நிலையில், சுப்மன் கில் அவுட்டானார். பின்னர் நிதானமாக ஆடிவந்த ரோகித் சர்மாவும் அணியின் ஸ்கோர் 173-ஐ தொட்டபோது, 83 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
வெறும் 23 ஓவர்களிலேயே 173 ரன்கள் என்ற அதிக பட்ச ஸ்கோர் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இரு வீரர்களின் விக்கெட்டும் பறிபோன நிலையில், பேட்டிங்கில் சொதப்பல் ஏற்படுமோ என்று ரசிகர்களின் மனதில் பதைபதைப்பு ஏற்பட்ட நேரத்தில், விராட் கோலி பக்காவான விளையாட்டை வெளிப்படுத்தி 113 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உச்சத்துக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.