Ravichandran Ashwin 
விளையாட்டு

இலக்கைத் தொட்டு சாதனைப் படைப்பாரா அஸ்வின்?

பாரதி

ஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் என்ற இலக்கை எதிர்கொண்டு இருக்கிறார். இந்த சாதனையை அடைவதற்கு அஸ்வினுக்கு ஒரு சிக்ககலும் எதிர்நோக்கி வருகிறது. அதனை அவர் உடைத்தெரிந்து சாதனைப் படைப்பாரா என ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 489 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைக்க இன்னும் 11 விக்கெட்டுகளே உள்ளன. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது. இந்த தொடரில் அஸ்வின் அந்த 11 விக்கெட்டுகளை எடுத்து சாதனைப் படைப்பார் என்றுரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அஸ்வின் அந்த சாதனையை படைக்க ஒரு சிக்கலும் காத்துக்கொண்டிருக்கிறது. அஸ்வினுக்கு இப்போது 37 வயதாகியுள்ளது. ஆகையால் அவருக்கு கிடைத்த போட்டிகளிலெல்லாம் விளையாடினால் மட்டுமே இலக்கை அடைய முடியும். ஆனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்திய அணி வெளிநாட்டில் விளையாடும்போதெல்லாம் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவையே சுழற்பந்து வீச்சுக்கு விளையாட வைக்கிறது.

இதனால் அஸ்வினுக்கு பெரும்பாலும் பந்துவீசும் வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகவும் கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்திலும் கூட ஜடேஜாவே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் அஸ்வினுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் அஸ்வின் 500 விக்கெட்டுகள் எடுப்பார். இதன்மூலம் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் கும்ப்ளேவை அஸ்வினால் பின்னுக்கு தள்ள முடியும் .

அதேபோல் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை எடுத்த சாதனையையும் படைக்க முடியும். இதுவரை அஸ்வின் 94 டெஸ்ட் போட்டிகளில் 489 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் இது அதிகப்படியான போட்டிகளில் எடுத்த விக்கெட்டுகள் என்பதால். இந்த தொடரில் அஸ்வின் எடுக்கும் 500 விக்கெட்டுகளே பட்டியலில் முதல் இடத்திற்கு அவரை அழைத்துச் செல்லும்.

மூன்றாவது இடத்தில் கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நான்காம் இடத்தில் ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதேபோல் ஜடேஜா 67 போட்டிகளில் 275 விக்கெட்டுகளை எடுத்து ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் 500 விக்கெட்டுகளை எடுக்கும் வாய்ப்பை இந்திய கிரிக்கெட் நிர்வாகமே கொடுக்க வேண்டும். இத்தனை விக்கெட்டுகளை எடுத்து கொடுத்த அஸ்வினை விட்டு விட்டு ஷார்துல் தாக்கூரை தேர்வுசெய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கிறது.

டேஸ்டியான ராகி சப்பாத்தி - பிரட் தோசை செய்யலாம் வாங்க!

சமூக ஒருங்கிணைப்புக்கு அவசியமாகும் சகிப்புத்தன்மை!

குளிருக்கு இதமாக, ப்ரோட்டீன் நிறைந்த பச்சைப் பட்டாணி-பசலைக் கீரை சூப் செய்யலாமா?

சைபர் கிரைம்: திரைக்குப் பின் அதிகரிக்கும் குற்றங்கள்; சிக்கித் தவிக்கும் மக்கள்! தப்பிக்க என்ன வழி?

தெய்வீக மாதமான கார்த்திகையின் 12 சிறப்புகள்!

SCROLL FOR NEXT