விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!

ஜெ.ராகவன்

லகக் கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

தீபாவளி தினமான நேற்று ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்திய அணியினர் பட்டாசு வெடிகளைப் போல் ரன்களைக் குவித்ததைக் கண்டு அனைவரும் ரசித்தனர். இதன் மூலம் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டிகளில் 9 ஆட்டத்திலும்  இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 410 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி 48 ஓவர்களில் 250 ரன்களில் சுருண்டது.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததும், கே.எல்.ராகுல் சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். முதல் முறையாக இந்திய அணியின் முதல் 5 பேட்ஸ்மென்களும் குறைந்தபட்சம் 50 ரன்களை எடுத்தனர். இந்திய அணியின் சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். விராட் கோலி, ரோகித் சர்மா தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

நெதர்லாந்து அணி களத்தில் இறங்கியபோது 2வது ஓவரிலேயே வெஸ்லி பெர்ரேஸி, சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இலங்கை, தென்னாப்பிரிக்கா போலவே நெதர்லாந்தையும் குறைந்த ரன்களுக்கு சுருட்டிவிடலாம் என இந்தியா நினைத்திருந்த நேரத்தில் நெதர்லாந்து கடுமையாகப் போராடியது. எனினும் மாக்ஸ் ஓ தெளத் மற்றும் காலின் ஆக்கர்மான் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு கூட்டாக நின்று ஆடி 61 ரன்கள் சேர்த்தனர். ஆக்கர்மென் 35 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூவாகி அவுட்டானார். மாக்ஸ் ஓ தெளத்தும் ஜடேஜா பந்து வீச்சில் வெளியேறினார்.

விராட் கோலி பந்துவீச்சில் எட்வர்ட்ஸ் வெளியேறினார். சைப்ரன்ட் ஏஞசல்பிரசெட் மற்றும் தேஜா நெடுமனூரு இருவரும் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆனாலும், அவர்களும் விரைவில் வெளியேறினர்.

இறுதியில் நெதர்லாந்து 48 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இனி, இந்திய அணி வரும் புதன்கிழமை மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT