IPL 2025 
விளையாட்டு

IPL 2025: மெகா ஏலத்தில் எத்தனை வீரர்கள்? முழு விவரம் இதோ!

பாரதி

2025ம் ஆண்டடின் ஐபில் தொடருக்கான மெகா ஏலம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பல எதிர்பார்ப்புகளுக்கும் ட்விஸ்ட்களுக்கும் நடுவே விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று கேப்டன்கள் சாதாரண வீரர்களாக அணியில் விளையாடினர். விராட் கோலி, தோனி மற்றும் ரோஹித் ஷர்மா. தோனி தனது பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்தார்.

ஆனால், மும்பை அணி நிர்வாகமே ரோஹித் கேப்டன் பதவியை ஹார்திக் பாண்டியாவிடம் கொடுத்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. ஹார்திக் பாண்டியா மிகவும் வருத்தப்பட்டார். பின் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெறுவதில் பாண்டியா சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார்.

இப்படியான நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில்தான் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர். இதனையடுத்து ஏலத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க  மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில்,   320 கேப்டு பிளேயர்கள், 1,224 அன்கேப் பிளேயர்கள், மற்றும் 30 அசோசியேட் நேஷன்ஸ் வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் 1165 பேர் இந்திய வீரர்கள் மற்றும் 409 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். மேலும், இதில் ரிஷப் பண்ட், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் கலந்து கொள்வதால் மெகா ஏலத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு என்பது உருவாகி இருக்கிறது.

இந்த ஏலம் நவம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என்றும், சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் 2-வது ஐபிஎல் ஏலம் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2024 ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பர் 22ம் தேதி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. ஒருபக்கம் இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் நேரம், மறுபக்கம் ஏலம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Biggboss 8: பழி தீர்க்கும் சவுந்தர்யா… வசமாக மாட்டிக்கொண்ட விஷால், தீபக், ராயன்!

25000க்கும் மேற்பட்ட எலிகள் ஓடும் கோயில்... அடக் கடவுளே!

இளம் வயதினருக்கு உடற்பயிற்சியின்போது ஹார்ட் அட்டாக் வர காரணம் என்ன?

முந்திரிப் பருப்பு உடலில் கொழுப்புச் சத்தை அதிகரிக்குமா?

ராஜமவுலியை தொடர்ந்து ஆஸ்கார் விருதை குறிவைத்து காய் நகர்த்தும் அமீர்கான்!

SCROLL FOR NEXT