விளையாட்டு

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி; சென்னையில் ஏற்பாடுகள்! 

கல்கி

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதன்முறையாக நடத்தப்பட உள்ளது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வருகிற செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.  

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: 

தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை தமிழக அரசு WTO உடன் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடக்கவுள்ளது.

அதற்காக  உலகத் தரத்தில் மைதானத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போல் டென்னிஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டு டென்னிஸ் வீரர்–வீராங்கனைகள் இந்த மைதானத்தில் பயிற்சியை செப்டம்பர் 8-ம் தேதி முதல் தொடங்க உள்ளனர். 

–இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இப்போட்டியில் இந்தியாவின் டாப் 2 ஒற்றையர் டென்னிஸ் வீராங்கனைகளான அங்கிதா ரெய்னா (169) மற்றும் கர்மன் தண்டி (494) ஆகியோர் நேரடியாக பிரதான போட்டிக்கான வைல்டு கார்டுகளைப் பெறுவார்கள்  என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT