Kailash with Mansarovar
Kailash with Mansarovar

சிவபெருமானுக்கும் கயிலாயத்திற்கும் உள்ள தொடர்பு தெரியுமா?

Published on

சிவபெருமானுக்கு ‘கயிலாசநாதர்’ என்ற பெயர் உண்டு. கயிலாய மலையிலே அவர் வாசம் செய்வதாகவும், அதனால்தான் புனிதமான கயிலாய மலையின் மீது மனிதர்களால் ஏற முடியாது என்றும் நம்பப்படுகிறது. கயிலாய மலை சரியாக உலகத்தின் நடுப்பகுதியில் அமைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய அதிசயங்களைக் கொண்ட கயிலாய மலைக்கும், சிவபெருமானுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சிவபெருமானின் உறைவிடமாக கயிலாய மலை சொல்லப்படுகிறது. பல ஆயிரம் பக்தர்கள் தினமும் கயிலாய மலைக்குச் சென்று கயிலாசநாதரை தரிசித்துவிட்டு வருகிறார்கள். சிவபெருமானுடன் தொடர்புடையதாக இருப்பதாலோ என்னவோ கயிலாய மலையை சுற்றி எண்ணற்ற மர்மங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

கயிலாய பர்வதம் சொர்கத்திற்கும், பூமிக்கும் நடுவிலே பாலமாக செயல்படுவதாக இந்து மதத்திலும், புத்த மதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் இந்த மலையில் இருந்துதான் இறுதியாக சொர்க்கத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மலையில் ஏறத்தொடங்கும்போது, தலைமுடி மற்றும் கைகளில் இருக்கும் நகம் வேகமாக வளரத் தொடங்குவதை உணர முடியும். இரண்டு வாரத்தில் வளர வேண்டிய தலைமுடி மற்றும் நகங்கள் வெறும் 12 மணி நேரத்தில் வளர்ந்திருக்கும் என்று இந்த மலையை ஏற முயற்சித்தவர்கள் கூறுகின்றனர்.

கயிலாய மலை இயற்கையாக உருவான மலையாக இருக்க முடியாது. ஏனெனில், அங்கிருக்கும் மற்ற மலைகளோடு ஒப்பிடுகையில் இந்த மலை பார்ப்பதற்கு சமச்சீராக பிரமிட் போல இருப்பதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ கிருஷ்ணரின் இதயம் இன்றளவும் துடித்துக் கொண்டிருக்கும் கதை தெரியுமா?
Kailash with Mansarovar

கயிலாய மலைக்கு அடிவாரத்தில் இரண்டு ஏரிகள் உள்ளன. அவை மானசரோவர் மற்றும் ரக்ஷாஸ் தால் ஆகும். மானசரோவர் பார்ப்பதற்கு உருண்டை வடிவத்தில் சூரியனைப் போன்றும் ரக்ஷாஸ் தால் பார்ப்பற்கு அரை நிலவு வடிவத்திலும் இருக்கும். இந்த இரண்டு ஏரிகளையும் பாசிட்டிவ், நெகட்டிவ் சக்திகளை குறிப்பதாக மக்கள்  நம்புகின்றனர்.

மானசரோவர் நன்னீர் ஏரி, ரக்ஷாஸ் தால்  உப்பு நீர் ஏரியாகும். இரண்டு ஏரிகளும் பக்கத்தில் அமைந்திருந்தாலும் மானசரோவர் அமைதியான ஏரி என்றும் ரக்ஷாஸ் தால்  ஏரி அடிக்கடி கொந்தளிக்கக் கூடியது என்றும் சொல்லப்படுகிறது. இத்தகைய அதிசயங்கள் நிறைந்த கயிலாய மலையில் சிவன் வாசம் செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

logo
Kalki Online
kalkionline.com