இந்திய கிரிக்கெட் அணி, தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்ட மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது. இந்த நிலையில், இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். இதன் மூலம் இந்திய அணிக்காக 500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் கோலியும் இணைய இருக்கிறார்.
விராட் கோலி இதுவரை 110 டெஸ்ட் போட்டிகள், 274 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 115 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 500 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பெருமையை பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர், விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இவருக்கு மேல், இந்திய அணிக்காக அதிக சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 664 போட்டிகளில் விளையாடி முதல் இடத்திலும், எம்.எஸ்.தோனி 538 போட்டிகள் விளையாடி இரண்டாவது இடத்திலும், ராகுல் டிராவிட் 509 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதில் நான்காவதாக 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, இந்த சாதனைப் பட்டியலில் விராட் கோலியும் இணைய இருக்கிறார். நாளை 500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் விராட் கோலிக்கு இந்தியாவின் கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.